தமிழ் நாடு
கோவை ஈஷா மைய விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு போலீஸ் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோவை ஈசா யோகா மையத்தில் பலரை காணவில்லை என்றும் அவர்களை தமிழ்நாடு காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈஷா யோகா மையத்தில் தகன மேடை செயல்படுகிறது என்றும் அங்குள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்படுகின்றன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை ஈசா மையத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் திடீரென அவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.