இந்தியாவிலேயே தமிழ்நாடு பெண்கள்தான் டாப்பாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் புதுமைப் பெண் திட்ட விரிவாகத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
இத்தனை மாணவர்களை பார்ப்பதில் Dravidian Stock-ஆக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறக ஒரு Stock உள்ளது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த Stock. பெண்கள் என்றால் வீட்டில்தான் இருக்க வேண்டும். கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக் கொண்டு திரிகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பித்து, இன்று தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே டாப்பாக இருக்கீங்க. மார்க் வாங்குவதில் தமிழ்நாடு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் சேர்வதிலும் நீங்கள் தான் டாப். உயர்கல்வி முடித்துவிட்டு வேலைக்கு செல்வதிலும் நம் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப்.
இந்த காட்சியைத்தான் தந்தை பெரியார் காண நினைத்தார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் கல்லூரி படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, நல்ல பொருளாதாரத்துடன் இருக்க வேண்டும் என கனவு கண்டவர் பெரியார்.” என்றார்.