அண்ணா ஆட்சியில் தலைநிமிர்ந்த தமிழினம்!

அண்ணா ஆட்சியில் தலைநிமிர்ந்த தமிழினம்!
Published on

மார்ச் 6 அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில், “1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் வாக்குறுதியை (Stalin Statement)அறிவிக்க இருக்கிறேன்!

திராவிட ஆட்சி இந்த மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com