தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி காலமானார்

பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
Published on

மூத்த தமிழறிஞர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

கோவை வெள்ளலூரில் 1942இல் இளையபெருமாள் பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி.  

தம் வாழ்நாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் (2001-2004), சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர். செம்மொழி ஆய்வு நிறுவனம் துணைத் தலைவர் என பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

 தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, செம்மொழி விருது, சென்னை பதிப்பாளர் சங்கத்தின் கலைஞர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். திருக்குறள் அணிநலம்,  பரிமேலழகர் உரைத் திறன்,வான்மறை வள்ளுவம், திருக்குறள் நடையியல், திருக்குறள் பதிப்பு வரலாறு, திருக்குறள் வாழ்க்கை விளக்கம் உள்ளிட்ட பல குறள் குறித்த ஆய்வு நூல்களைத் தந்தவர்; ஏறக்குறைய 110 சிறந்த படைப்புகளை தமிழருக்கு அளித்த பெருமைக்குரியவர்.

அந்திமழையின் திருக்குறள் podcast நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டு உரையாடிய காணொளி இணைப்பு:

logo
Andhimazhai
www.andhimazhai.com