தமிழ் நாடு

வரக்கூடிய இடைத்தேர்தல்களில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு கூட்டணித் தலைமை வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் இதைக் கூறினார்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தியதில் சரியான வாதங்களை த.வெ.க. அரசு எடுத்துவைக்கவில்லை; அப்படிச் செய்திருந்தால் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்காது என்றும் அன்சாரி கூறினார்.
மேலும், நீதிமன்றம் மூளையால் மட்டுமல்ல இதயத்தாலும் தீர்ப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.