தஞ்சாவூர் பெரிய கோயில் ஆடைக் கட்டுப்பாடு
தஞ்சாவூர் பெரிய கோயில் ஆடைக் கட்டுப்பாடு

வேட்டி, சேலை... தஞ்சை பெரிய கோயிலில் புதிய உடைக் கட்டுப்பாடு!

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்துசமயத் துறை புதிய உடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக கோயிலின் முன்பாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஆண்கள் வேட்டி, பேண்ட், சட்டையும்

பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகிய உடைகளை அணிந்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளும் வந்துசெல்லும் சுற்றுலாத் தலம் எனும் நிலையில், ஆங்கிலத்திலும் இதே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

கீழே திருக்கோயில் நிர்வாகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com