160 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

tasmac shop
டாஸ்மாக்
Published on: 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 160 ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு புதிய நடைமுறைகளைப் பின்பற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற புதிய நடைமுறைகளால் விற்பனையில் தாமதம் ஏற்படுவதுடன், ஊழியர்களுக்குப் பணிச்சுமை ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

எனவே, இவற்றைத் தவிர்க்க காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், தற்போது ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நேற்று கடைகளைத் திறக்காத 960 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றும் கடையைத் திறக்காத 160 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram