அமைச்சரின் பதிலில் அதிருப்தி- போராட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியர்கள் கைது!

அமைச்சரின் பதிலில் அதிருப்தி- போராட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியர்கள் கைது!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் நேற்று இரவும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கைக்காகப் போராடும் ஆசிரியர்களின் பிரச்னையை ஆராய மூவர் குழு அமைக்கப்படும் என்றும் டெட் தேர்வு எழுதியவர்களுக்கு காத்திருப்பு வயதை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதை ஏற்காமல் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மூன்று தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று அவர்களை போராட்டம் நடக்கும் பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் அன்பழகன் வளாகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழுக்குழுவாக ஆசிரியர்களை கைதுசெய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com