த.வெ.க. சின்னத்திற்கு நேராக மை; வாக்குப்பதிவு நிறுத்தம்!

Marking found in the EVM machine
த.வெ.க. சின்னத்திற்கு நேராக மை
Published on: 

தாராபுரம் தொகுதியில் கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியிலும், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று காலை 7 மணி முதல் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் 75 வயது மூதாட்டியின் வாக்கைச் செலுத்திய தேர்தல் அலுவலர், சின்னத்தை மாற்றி செலுத்தியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, தி.மு.க.,அ.தி.மு.க., உட்பட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர் செயல்பட்டதாக, கோட்டாட்சியரிடம் தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதேபோல, மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், த.வெ.க.வின் விசில் சின்னத்திற்கு நேராக கருப்பு மை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வேறொரு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு, அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com