டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

tet exam
ஆசிரியர் தகுதித் தேர்வு (மாதிரிப்படம்)
Published on

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2 என்று இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 19) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை 2027 ஆகஸ்ட் 31-லிருந்து 2028 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவிற்குள் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது.

இதனைத் தொடர்ந்து, தீவிரமாக தயாராகிவரும் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அந்த இணையதள முகவரி:

https://www.trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-922

logo
Andhimazhai
www.andhimazhai.com