தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்... தொடக்க விழா ஒத்திவைப்பு!

Thaimaman thangamothiram thittam
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
Published on

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா தேதி ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் காரணமாக தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா உசிலம்பட்டியில் தொடங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். இதன் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது. தேவையான அனைத்து தரச்சான்றிதழ்களும் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்." என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி, இதன் தொடக்க விழா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com