விசில் சத்தம் இல்லை, பாம் சத்தம்- விஜய் 200 குறித்து தமிழிசை கிண்டல்

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்
Published on

விஜய்யின் கட்சி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது அபரிமிதமானது என்று பா.ஜ.க. முக்கிய தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். 

விஜய் சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பது சரி; ஆனால் செங்கோட்டையன் போன்ற மூத்தவர்கள் சொல்வது, கோட்டை கட்டுவது எவ்வளவு பெரிய கனவு என்பது புரியும்; அவர் சொல்வதைப் போல விசில் சத்தம் இல்லை; சாதாரணமான சத்தம்தான்; இவர் சொல்வதைப் போல பார்த்தால் அது பாம் சத்தம் என்று தமிழிசை கிண்டலாகக் கூறினார். 

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு; தேர்தல் முடிவு வரக்கூடிய மே 4ஆம் தேதி அன்று தெரிந்துவிடும் என்றும் அவர் கூறினார். 

இன்னொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், விஜய் இப்போது கோயிலுக்குப் போகிறார்; தேர்தலுக்குப் பிறகு சூட்டிங்குக்கு இடம் தேடப் போவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றார் தமிழிசை.  

logo
Andhimazhai
www.andhimazhai.com