தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் மனுத்தாக்கல் செய்த தஞ்சை மாவட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், “ தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், ஆர். முரளீதரன், கட்சியின் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.