திடீர்ப் பரபரப்பு... எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

Tharahai Cuthbert
தாரகை கத்பர்ட்
Published on

பிரதமர் வேட்பாளராக இராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் த.வெ.க.விலிருந்து இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் விலகுவோம் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் இடம் மாறி அமர்ந்தது பரபரப்பை உண்டாக்கியது.

இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த தாரகை கத்பர்ட், இன்று எதிர்க்கட்சி வரிசையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இந்த இருக்கை மாற்றம் குறித்து விளக்கமளித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், "காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு உரிய இருக்கை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கட்சிக் குழுக்களின் தலைவர்கள் வரிசையில் அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

அதன்பிறகே, திடீர்ப் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com