“பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ..!” – கோவையில் மோடி பேச்சு! 

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

“நான் மேடைக்கு வந்தபோது, விவசாயிகள் துண்டை சுழற்றினார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று நினைத்தேன்.” என்று பிரதமர் மோடி கோவையில் பேசியுள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். கொடிசியாவில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் பேசிய மோடி வணக்கம் என கூறி தனது உரையை தொடங்கினார். மேலும் பி.ஆர் பாண்டியனின் உரை தமிழில் இருந்ததால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆளுநர் ரவியிடம் பாண்டியனின் உரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தருமாறு கேட்டுள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர், “நான் மேடைக்கு வந்தபோது, விவசாயிகள் துண்டை சுழற்றினார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று எண்ணினேன். மருதமலை முருகனை வங்குகிறேன். தென்னிந்தியாவின் தொழில் பீடம் கோவை.  இங்குள்ள ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு செய்கிறது. இயற்கை விவசாயம் என்பது என் மனதுக்கு நெருக்கமானது.

மேடைக்கு வருவதற்கு முன்னர் கண்காட்சியை பார்வையிட்டேன். ஒருவர் இயந்திர பொறியியல் முனைவர் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்துக்கு வந்திருக்கிறார். மற்றொருவர் இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு வேளாண்மைக்கு வந்துள்ளார். ஒருவேளை நான் இங்கு வராமல் இருந்திருந்தால் நிறைய விசயங்கள் கற்றுக் கொள்ளாமல் போயிருக்கும்.

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வேளாண்மையில் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. வேளாண்மை துறை சார்ந்த ஏற்றுமதி இரண்டு மடங்காகி உள்ளது. விவசாயிகள் கடன் அட்டை மூலம் இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் கோடிக்கு அதிகமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் பலனடைந்துள்ளனர். நாட்டின் சிறு விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் இன்றைக்கு தேவை. ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அதிக அளவு பயன்படுத்துவதால் நிலம் பாதிக்கப்படுகிறது. மண்ணின் ஈரத்தன்மை பாதிக்கப்படுகிறது. விவசாயத்தில் செலவீனமும் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு, பயிர் பன்முகத்தன்மையும், இயற்கை வேளாண்மையும் மட்டுமே. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இயற்கை விவசாயம் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் சுமார் 35ஆயிரம் ஹெக்டர் அளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மை சுதேசி கருத்து. இது நமது பாரம்பரியம்.

கடவுள் முருகனுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருட்களாக படைக்கிறோம். ஒரே ஏக்கரில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளுங்கள்.

விரைவில் இந்தியா வளர்ந்த முன்னேறிய நாடாக நிச்சயமாகமாறும். நான் இந்தியா பொருளாதாரத்தில் ரேங்க் 2 (தரவரிசை 2) இருக்கும்போது பட்டம் பெறுவேன். நான் இந்தியா பொருளாதாரத்தில் ரேங்க் 1 (தரவரிசை 1) இருக்கும்போது ஓய்வு பெறுவேன். உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com