முதலமைச்சரிடம் தகைசால் தமிழர் தமிழர் விருது பெறும் கி.வீரமணி
முதலமைச்சரிடம் தகைசால் தமிழர் தமிழர் விருது பெறும் கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய முதலமைச்சர்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

தகைசால் தமிழா் விருது, 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com