கன்வர்லால் குழுமத்தில் நடைபெற்று வந்த சோதனை
கன்வர்லால் குழுமத்தில் நடைபெற்று வந்த சோதனை

கன்வர்லால் குழுமத்தில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு!

சென்னையில் கன்வர்லால் குழுமத்துக்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.

கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான மருந்து மற்றும் ரசாயன நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் முடிவில் ரூ.1.20 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com