ஆளுநா் ஆா். என். ரவி
ஆளுநா் ஆா். என். ரவி

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத அச்சம்! – ஆளுநர் ரவி

மாம்பலம் கோதண்டராமர் கோயில் பூசாரிகள், ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத அச்ச உணர்வு இருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகத்தில் போட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com