அண்ணாமலைக்கு பேண்டேஜ் ஒட்டும் முருகானந்தம்
அண்ணாமலைக்கு பேண்டேஜ் ஒட்டும் முருகானந்தம்

அடிபட்டதோ வலது கையில்... அண்ணாமலைக்கு பேண்டேஜ் போட்டதோ இடது கையில்!

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வலது கை விரலில் அடிபட்ட நிலையில், இடது கை விரலில் பேண்டஜ் போடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மக்கள் என் பயணம்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் அண்ணாமலை வால்பாறைக்குச் சென்றிருந்தார்.

அப்போது, பிரச்சார வாகனத்தில் ஏறும்போது அவரது வலது கை கட்டைவிரலில் லேசாக அடிபட்டு, கையை உதறிக் கொண்டே இருந்தார். அதைப் பார்த்த கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முருகானந்தம் உடனடியாக கட்சி தொண்டர்களிடம் பேண்டேஜ் வாங்கி வரச் சொன்னார். அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது வலது கை கட்டைவிரலில் பேண்டேஜை ஒட்டினார்.

அவசரத்தில், அடிபட்ட கையை அவர் மறந்துவிட்டு பேண்டேஜை ஒட்டிய காட்சி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com