தமிழ் நாடு
தெருநாய் பிரச்னைகளை தீர்ப்பது ரொம்ப சிம்பிள் என்று கமல்ஹாசன் எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசனிடம் தெருநாய் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ரொம்ப ‘சிம்பிள்’. அதைபற்றிய விஷயம் தெரிந்தவர்கள்; உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் கழுதை எங்கே காணோம் என கவலைப்படுகிறார்களா?. நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது கழுதைகள். அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து.” என்றார்.