திறக்கப்பட்ட தி.நகர் மேம்பாலம்! - முடிவுக்கு வரும் வாகன நெரிசல்!

திறக்கப்பட்ட தி.நகர் மேம்பாலம்! - முடிவுக்கு வரும் வாகன நெரிசல்!
Published on

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

உஸ்மான் சாலை - சிஐடி நகரை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தில் நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, 164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் 1.2 கி.மீ. நீளத்தில் 53 தூண்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. ஆ. ராசா, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com