தீபாவளி கொண்டாடும் மக்கள்
தீபாவளி கொண்டாடும் மக்கள்

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் அடுத்த நாளே திரும்பிவருவதற்கு சிரமம் என்பதால் திங்கள்கிழமையும் தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசு இன்று மாலை விடுமுறை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

“இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com