தூய்மையான நகரங்கள் பட்டியலில் தேனி அல்லிநகரம்...

தேனி அல்லிநகரம்
தேனி அல்லிநகரம்
Published on: 

தமிழகத்தின் தூய்மையான நகரமாக தேனி மாவட்டத்தின் அல்லிநகரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று தில்லியில் வழங்கினார்.

மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 4,751-க்கும் மேற்பட்ட நகரங்களில், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் உட்பட்ட 43 அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தேசிய அளவில் தூய்மையான நகரமாக நவி மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம், இந்த ஆண்டு 'சுவச் ஷஹர் ஜோடி' என்ற புதிய பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தூர், அதன் கூட்டாட்சி நகரமான தேபால்பூருடன் இணைந்து மென்டர் சிட்டி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.

தமிழகத்தின் தூய்மையான நகரமாக அல்லிநகரம் நகராட்சி உள்ளது. இதற்கான விருதினை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து தேனி மாவட்டத்தின் அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பார்கவி பெற்றுக்கொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram