முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை! – ஜெயக்குமார் திட்டவட்டம்

“எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை.” என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்திகயாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தேர்தல் நெருங்க நெருங்க யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பது தெரியவரும்.

இந்தியா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுகிறது. அதே நிலை தமிழகத்திலும் வரும். திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் இடையே பல முரண்பாடுகள் உள்ளன.

எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை. பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்ற பெட்டியை கழற்றிவிட்டோம். இனி அந்த பெட்டியை இணைக்க வாய்ப்பில்லை. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டுமென்பதற்காகவே அண்ணாமலை இப்படி பேசுகிறார்.

அண்ணாமலை போல் அண்ணா, அண்ணா என போலி கும்பிடு போடும் நபர்கள் நாங்கல் இல்லை. அதிமுக சிங்கமாக எதிர்த்து வரும்போது, அனைத்து ஆடுகளும் ஓடும் நிலைதான் ஏற்படும்.

பத்து வருடத்தில் மாநிலத்தின் என்ன உரிமைகளை எல்லாம் பாஜக புறக்கணித்தது என்பதை அம்பலப்படுத்துவோம். அதேபோல், தமிழக அரசு மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்து கொண்டு, அவர்கள் கடந்த காலத்தில் மாநில உரிமைகளை பறிகொடுத்ததை அம்பலப்படுத்துவோம். மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத செயல்பாட்டைத் தோலுரித்துக் காட்டுவோம்.” என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com