ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என அதிமுக பொதுசெய்லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “அமித் ஷாவிடம் கூட்டணி குறித்தெல்லாம் பேசவில்லை. தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்தார். அவர் புதுக்கோட்டைக்கு வந்தபோது அவரை சந்திக்க முடிவில்லை. அதனால் அவரை சந்திக்க வந்தேன்.
எந்தெந்த கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பாமக போல இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். அதன் பிறகே தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்க முடியும்.
ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை. ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை விளக்கவிட்டேன்.
அதிமுக வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.
உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார்.” என்றார்.