இப்படியும் சொல்றாங்க... விஜய்க்கு எதிராக இறங்கி வேலை செய்யும் ரஜினி!

இப்படியும் சொல்றாங்க... விஜய்க்கு எதிராக இறங்கி வேலை செய்யும் ரஜினி!
Published on

‘ஜெயிலர்’ பட விழாவில் விஜய்க்கு எதிராக ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதே கழுகு மீண்டும் விஜய்க்கு எதிரான காய் நகர்த்தலுக்கு களம் இறங்கி வந்திருப்பதுதான் லேட்டஸ்ட் அன்ட் ஹாட்டஸ்ட்.

திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, இத்தேர்தலில் விஜய் அடைந்த வெற்றியால் அதிக மனப்புழுக்கத்துக்கு ஆளானவர்தான் ரஜினிதான் என்கிறார்கள். ‘ ஆஃப்டர் ஆல் விஜய்யே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கும்போது, ’சரியான சமயத்துல நீங்க அரசியலுக்கு வந்திருந்தா, இந்நேரம் மூணு முறை தமிழக முதல்வரா இருந்திருப்பீங்க’ என்று ரஜினியை நோக்கி ஆதங்கப்படாதவர்களே இல்லை என்பது வெளிப்படை.

இதற்கு ஒரு பெரும்மூச்சு தவிர ரஜினியிடம் வேறு பதிலில்லை. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு அவசர அவசரமாய் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணியில் ரஜினி ஒரு பின்கதவு அரசியலில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

ரஜினி, ஸ்டாலின் சந்திப்பு முடிந்தவுடன் ‘இக்கட்டான நேரத்தில் கூட நான் உங்களுடன் இருப்பேன்’ என்று மீடியாக்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டது. அதை ஒட்டி ரஜினிக்கு எதிராக கருத்திட்டவர்கள் அவர் தொடர்ந்து சன் பிக்‌ஷர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் படங்களில் நடித்து வருவதால் அந்த பண உறவைப் பேணிக்காக்கவே ஸ்டாலினை சந்தித்தார் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.

ஆனால் நிஜத்தில் ரஜினியின் நோக்கம் விஜய்யை அரசியல் ரீதியாக வளரவிடாமல் தடுப்பது என்கிறார்கள். ஸ்டாலினை சந்தித்தபோது, ‘பேசாம நீங்களும் எடப்பாடியும் ஒண்ணா சேர்ந்துருங்களே’ என்கிற யோசனையை முதல் ஆளாய் முன்மொழிந்ததே ரஜினிதான் என்கிறார்கள். அதைக் கேட்டு குழம்பிய ஸ்டாலினிடம், ‘உங்க ரெண்டுபேருக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. ஆனா ஆட்சி விஜய் கைக்குப் போனா அரசியல் வியாபாரம், சினிமா வியாபாரம், ரியல் எஸ்டேட் எல்லாமே உங்க ரெண்டு தரப்பு கையை விட்டுப் போயிரும் என்று ரஜினி விலாவாரியாக விளக்கியிருக்கிறார்.

அந்த சந்திப்புக்குப் பின்னர்தான் , ‘விஜய் ஒரு ஆறுமாதம் ஆண்டுதான் பார்க்கட்டுமே’ என்கிற ஸ்டாலினின் நிலைப்பாடு தலைகீழாக மாறுகிறது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது என்று பேட்டி கொடுக்கப்படுகிறது. திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து அறிவாலய கஸ்டடிக்குக் கொண்டுவரப்படுகின்றனர். ரஜினியின் பலே ஐடியா எடப்பாடிக்கும் பாஸ் செய்யப்பட்டு அம்முகாமும் உற்சாகமடைகிறது. தமிழக மக்கள் எடப்பாடிதான் முதல்வராகவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று பேட்டிகள் வெளியாகத்தொடங்கியிருக்கின்றன.

வெற்றி பெற்றவருக்கு பூங்கொத்து கொடுக்க வரும் ஒவ்வொருவனும் தன் முதுகில் கத்தியையும் வைத்திருக்கிறான் என்று சும்மாவா சொன்னார்கள்?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com