திருமாவளவன் திருத்திய விஜய்யின் கூட்டணிப் பெயர்!

திருமாவளவன் திருத்திய விஜய்யின் கூட்டணிப் பெயர்!
Published on

விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணிக்கு நேற்று பெயர் அறிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டதை, திருமாவளவன் உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், திருமாவளவனின் வி.சி.க. பொதுச்செயலாளர்களில் ஒருவரான சிந்தனைச்செல்வன் இன்று காலையில் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 

அதில், “ சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என்று முன்மொழியப்பட்ட பெயர், நமது தலைவர் எழுச்சித்தமிழரின் அறிவார்ந்த ஆளுமையால் ‘ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற தமிழ்தேசியம்….சமூக நீதிக்கான தமிழ் தேசியம் என தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுப்பிரகடனத்தில் தலைவர் பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன்.

மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சாதியவாத சக்திகளே தமிழ்சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் நம் தலைவர்.

விடுதலைச்சிறுத்தைகளின் உத்தி மாறலாம். இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை." என்று சிந்தனைச்செல்வன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com