ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்
ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்

மாயமான காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு!

காணாமல்போயிருந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனசிங், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சொத்து காரணமாக தன்னை சிலர் கொல்ல முயல்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சில நாள்களாக அவரைக் காணவில்லை.

தன் தந்தையைக் காணவில்லை என அவரின் மகன் மே 2 ஆம் தேதி உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில், உவரி அருகில் கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் மீட்கப்பட்டது. 

இதையொட்டி, சென்னை சத்யமூர்த்திபவனில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, உடனடியாக தான் நெல்லைக்குப் புறப்படுவதாகவும் கேள்விப்படும் தகவல் உண்மையாக இருக்கக்கூடாது என தாங்கள் விரும்புவதாகவும் காவல்துறையினரிடம் உரிய விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com