திருப்பரங்குன்றம்... தீபம் ஏற்றிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்!

தீபம் ஏற்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
தீபம் ஏற்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
Published on

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் தூண் மாடலில் அரோகரா சரண கோஷங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றினார்.

சென்னையில் தாரா பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சி மேடையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல் தூண் மாதிரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்றினார். அப்போது, “அரோகரா! திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா!” என சரணகோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக மலை உச்சியில் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கினார். தமிழக அரசு, இத்தீர்ப்பை செயல்படுத்தவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com