சௌமியா சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் பதில்சொன்ன செங்கோட்டையன்!

Sowmiya anbumani
செளமியா அன்புமணி
Published on

சட்டப்பேரவையில் இன்று துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. முதலில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதத்தில் பா.ம.க. உறுப்பினர் செளமியா அன்புமணி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

"கடந்த 2021, அக்டோபர் மாதம் சென்னையில் பெருமழையினால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால்,காலநிலை அகதிகளாக ஏராளமானோர், தங்கள் வீடுகளையும் பொருட்களையும் தற்காலிகமாக விட்டுச் சென்றனர். அந்த வரலாறு மீண்டும் வரக்கூடாது.

அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு பேரிடர் குறித்து விரிவாக ஆராய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 600 பக்க அறிக்கையை இந்தக் குழு தாக்கல் செய்தது. ஊடகச் செய்திகளில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.

இதுவரை 41 மாதங்கள் கடந்த பிறகும் அந்தக் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்படவில்லை. அந்தக் குழுவின் அறிக்கையில், இதுபோன்ற பேரிடர்க் காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் இடம் பெற்றிருக்கும். இதை வெளியிடுவதால், மீண்டும் கனமழையினால் ஏற்படும் பெரும் வெள்ள அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என்பதால் அந்த திருப்புகழ் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று சௌமியா கூறினார்.

அவர் பேசியதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவரைப் போல, அமைச்சர் செங்கோட்டையன் இப்போதைய அரசு ஒரு புதிய குழுவை அமைத்துள்ளதாகவும் அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதைப் பற்றியும் மட்டுமே குறிப்பிட்டு அமர்ந்துகொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com