திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து, 10 பேர் காயம்!

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து, 10 பேர் காயம்!
Published on

திருவாரூர் அருகே இன்று காலையில் அரசுப் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளானது. இதில் 10 பயணிகள் காயம் அடைந்தனர். 

திருவாரூரிலிருந்து மாவூர், நால்ரோடு, திருநெல்லிக்காவல் வழியாக திருக்கொள்ளிக்காடுவரை செல்லும் ஏ 12 பேருந்துதான், இன்று காலையில் விபத்தில் சிக்கியது.

பேருந்து சென்றுகொண்டிருந்தபோது வண்டியின் ஸ்டியரிங் இணைப்பு விட்டுப்போனதால், சாலையோரம் இருக்கும் கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது.

இடதுபக்கவாட்டில் சாய்ந்த பேருந்தின் முன்பகுதி சேதம் அடைந்தது.

பயணிகளில் 10 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com