கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து முதல்வர் சொன்ன அந்த வார்த்தை!

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞரின் நினைவிடம் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இவர்கள் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ஜி.கே. மணி, கே.வி. தங்கபாலு உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினிகாந்த், வைரமுத்து போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

கலைஞர் நினைவிடம் திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கலைஞர் என்றாலே போராட்டம்தான்!. அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்.” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணா – கலைஞர் நினைவிடம்

அண்ணா நினைவிடத்துக்கு உள்ளே இளங்கோவடிகள், கம்பர் ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணா அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

அதேபோல், புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கலைஞரைப் பாராட்டி சோனியா காந்தி எழுதிய கடிதம் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்று வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.

கலைஞரின் சதுக்கத்தின் கீழ் நிலவறை பகுதியில் கலைஞர் உலகம் எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com