ஸ்டெர்லைட் தீர்ப்பை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றிதெரிவித்த தூத்துக்குடி மக்கள்
ஸ்டெர்லைட் தீர்ப்பை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றிதெரிவித்த தூத்துக்குடி மக்கள்

ஸ்டெர்லைட் தீர்ப்பு- முதல்வரிடம் நேரில் நன்றி சொன்ன தூத்துக்குடி பிரதிநிதிகள்!

ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் அத்துமீறலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் அதை இயங்கவிடக்கூடாது என மீண்டும் தடை விதித்துள்ளது. இதற்காக, தமிழக அரசின் சார்பில் உறுதியாக வாதங்களை எடுத்துவைத்ததற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். 

போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, வழக்குரைஞர் அரிராகவன், மகேஷ் குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா கிதர், பிஸ்மி சிடர், பிஸ்மித், வசந்தி சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் தூத்துக்குடியிலிருந்து வந்திருந்தனர்.

முதலமைச்சரின் முகாம் அலுவலகமான அவரின் இல்லத்தில், இன்று நடைபெற்ற சந்திப்பில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினருடம் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியும் இருந்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com