கடலூரில் தொடரும் சம்பவங்கள்... 5,000+ கோழிகள் திடீர் இறப்பு!

Hens died
கோழிகள் இறப்பு
Published on: 

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் 5,000-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த மூன்று நாள்களாக கோழிகள் திடீரென கொத்துக்கொத்தாக இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையின் உரிமையாளர்கள் கூறினர். அவர்கள் கோழிகள் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய மாதிரிகளை எடுத்துச்சென்று ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இறந்துபோன கோழிகளை, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் அப்படியே மொத்தமாக மண்ணில் புதைத்து வருகின்றனர்.

முதற்கட்டமாக, இந்தத் திடீர் இறப்புக்குப் பறவைக் காய்ச்சல் காரணமல்ல என்றும், காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக கடலூர் மாவட்டத்தில், வெயில், மழை, குளிர் என்று காலநிலை வெகுவாக மாறி வருவதால், அது காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோழிகள் அதிகமாக இறக்கும் பண்ணைகள் 3 மாத காலத்திற்கு கோழிகளை விற்கக் கூடாது என்று கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram