இடதுசாரி கட்சிகள் சேர்ந்து புதிய குழு!

இடதுசாரி கட்சிகள் சேர்ந்து புதிய குழு!
Published on

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் இணைந்து ‘இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு’ எனும் புதிய கூட்டை உருவாக்கியுள்ளன. 

சிபிஐ, சிபிஐஎம், சிபிஐஎம்எல்_ விடுதலை ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளின் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்திய கம்யூ. கட்சியின் பாலன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, மூன்று கட்சிகளையும் சேர்ந்த 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com