பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மியூசிக் அகாடமியின் இந்த முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதை கர்நாடக இசை பாடக டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கக் கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.