ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

த.மா.கா.வுடன் பா.ஜ.க. 2ஆம் சுற்றுப் பேச்சு- 4 தொகுதிகள் கோரிக்கை!

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

த.மா.கா. தலைவர் வாசனை, சட்டமன்ற பா.ஜ.க. குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் மைய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். 

அப்போது, த.மா.கா. தரப்பில் நான்கு தொகுதிகள் விருப்பத் தொகுதிகளாக முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தேர்தல் வியூகம், கூட்டணி உத்தி போன்றவை குறித்து பேசியதாகவும் தொகுதிகள் குறித்து பிறகு பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இச்சந்திப்பின்போது, த.மா.கா. தரப்பில் நான்கு தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, மயிலாடுதுறை, ஆரணி, சிதம்பரம், நெல்லை ஆகிய எட்டு விருப்பத் தொகுதிகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com