தமிழ் நாடு
தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் அடுத்த மாதம் 14ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
பேரவைத் தலைவர் அப்பாவு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் அக்டோபர் 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டியுள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.