செப்டம்பர் 8வரை பட்ஜெட் கூட்டத்தொடர் – பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்

Speaker of the Legislative assembly
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்
Published on

இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், செப்டம்பர் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டள்ளதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

மேலும், "நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். முதல் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும். தினமும், காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள், தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும்." என்றும் பிரபாகர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com