காவிரியில் 16 டி.எம்.சி. நீரை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்!

Supreme Court
உச்சநீதிமன்றம்
Published on

தமிழகத்திற்குத் திறந்துவிடாமல் நிலுவையில் இருக்கும் காவிரி நீரை, உடனடியாக திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :

"காவிரி ஆறு தமிழகத்தின் வாழ்வாதாரமாகும். காவிரி ஆற்று நீரை நம்பி, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில், மேட்டூர் அணை திறக்கப்படாததால், பரந்த அளவிலான சம்பா சாகுபடிக்குப் பாசன நீர் கொண்டு செல்ல முடியவில்லை.

மேட்டூர் அணையை கடந்த 1ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து விட்ட நிலையில், அங்குள்ள குறைந்த அளவிலான நீர் இருப்பு அடுத்த 25 முதல் 30 நாள்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தாக்குப்பிடிக்கும்.

நடப்பு ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை விகிதாச்சார அடிப்படையில், கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரில் 16 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பற்றாக்குறையான நீரை உடனடியாக காவிரியில் திறந்துவிட்டு ஈடுசெய்ய கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும்." என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com