தமிழ் நாடு
காவிரி நீர்ப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் வரும் திங்களன்று தமிழக அரசு வழக்கு தொடுக்கவுள்ளது.
மதுரையில் இன்று பிற்பகலில் அமைச்சர் நிர்மல்குமார் இதைத் தெரிவித்தார்.
முன்னதாக, நெல்லையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வு என நிர்மல்குமார் கூறியிருந்தார்.
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாக அவர் கூறினார்.
பின்னர், அவரே சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஏன் இப்படி கூடவேண்டும் என்கிறபடியும் அவர் கேட்டார்.