ஏப்ரல் 13-லிருந்து தமிழகப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Published on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாள்களில் இந்தத் தேர்வுகள் முடியவுள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 12ஆம் தேதிக்குள் இவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. 

ஏப்ரல் 13ஆம்தேதியிலிருந்து 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. 

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com