செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தி.மு.க.- காங். தொகுதிப்பங்கீடு தாமதமா?- செல்வப்பெருந்தகை சொன்ன பதில்!

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடிப்பதாகப் பேசப்படும் நிலையில், மேலிடத் தலைவர்கள் இதுபற்றிப் பேசிவருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் இதுபற்றி கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, “ எங்களுக்கு அகில இந்தியத் தலைமை... அவர்கள் அடிக்கடி இங்கு வந்துபோய்க்கொண்டிருக்க முடியாது. தொலைபேசியில் அலைபேசியில் தில்லி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உடன்பாடு கையெழுத்தாகும்போது செய்தியாளர்களை அழைத்து அறிவிப்போம்.” என்றார் அவர். 

தொகுதிகளின் எண்ணிக்கையை காங்கிரஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; அவர்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். 

இன்னும் உடன்பாடு தாமதமாகியபடி இருக்கிறதே என ஒருவர் கேட்க, இன்னும் வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு கையெழுத்தாகவில்லை எனக் குறிப்பிட்டு, ஏன் காங்கிரசை மட்டும் நீங்கள் ஆர்வமாகக் கேட்கிறீர்கள் என சிரித்துக்கொண்டே கேட்டார், செல்வப்பெருந்தகை. 

மேலும், எல்லோரும் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறோம்; தொகுதிகளின் எண்ணிக்கை, இடம் பற்றிப் பேசி சுமுகமாக உடன்பாட்டை எட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com