டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 1 ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

குரூப் – 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரும் 27.09.2026ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும். இது முதல்நிலை கொள்குறி வகைத் தேர்வாகும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 4 தாள்கள் கொண்ட விரிந்துரைக்கும் வகை முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

இறுதியாக, நேர்காணல் நடைபெறும். மொத்தம் 3 கட்டங்களாக குரூப் – 1 தேர்வு நடைபெறும்.

கடந்த 23.06.2026ஆம் தேதி, இந்த குரூப் – 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

இந்தத் தேர்வுக்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com