டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 2, 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC
டி.என்.பி.எஸ்.சி
Published on: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

குரூப் – 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரும் 01.11.2026ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும். இது முதல்நிலை கொள்குறி வகைத் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

கடந்த 11.08.2026ஆம் தேதி, இந்த குரூப் – 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வின் மூலமாக அரசுத் துறைகளிலுள்ள சார்-பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உட்பட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உட்பட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வுக்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பதாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com