டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரை – ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு!

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் நிராகரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது வரை இருந்து வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், தேர்வு முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பது, வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையிலிருந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவரை தேர்வு செய்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களைக் கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சைலேந்திர பாபு நியமனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்துள்ளார். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் செயலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com