த.மு.எ.க.ச. 2022ஆம் ஆண்டு விருதுகள்
த.மு.எ.க.ச. 2022ஆம் ஆண்டு விருதுகள்

ஆர்.பாலகிருஷ்ணன், புதிய மாதவிக்கு த.மு.எ.க.ச. விருது அறிவிப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டுக்குரிய கலை இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான படைப்புகள், ஆளுமைகள் விபரத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக் குழு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா இன்று அறிக்கை விடுத்துள்ளனர். 

அதன் விவரம்: 

” முற்போக்குக் கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது-  வரலாற்றாய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் வழங்கப்படுகிறது. விருதுத்தொகை ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்)

மற்ற விருதுகளுக்குத் தேர்வான நூல்கள், குறும்படம், ஆவணப்படம் மற்றும் ஆளுமைகளுக்கு சான்றிதழுடன், விருதுத்தொகை ரூ.10,000 (பத்தாயிரம் ரூபாய்) வழங்கப்படும்.

1. தோழர் கே.முத்தையா நினைவு விருது தொன்மை சார் நூல் ‘காவிரி நீரோவியம்’ -சூர்யா சேவியர்

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருதுநாவல்- ஸலாம் அலைக்-'ஷோபாசக்தி'

3. சு.சமுத்திரம் நினைவு விருது- விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு*பங்குடி*'- க.மூர்த்தி'

4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது அல்புனைவு நூல்- ’வித்தி வான் நோக்கும் வியன்புலம்'- பெ.ரவீந்திரன்'

5. வெம்பாக்கம் ஏ.பச்சைப்பன் - செல்லம்மாள் (ப.ஜெகந்தாதன்) நினைவு விருது -கவிதைத் தொகுப்பு குருதி வழியும் பாடல்- அ.சி.விஜிதரன்

6. அகிலா சேதுராமன் நினைவு விருது-சிறுகதைத் தொகுப்பு*நசீபு*மு.அராபத் உமர்

7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது- மொழிபெயர்ப்பு நூல்*ஆன்மிக அரசியல்*இ.பா.சிந்தன்

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம் ) விருது- குழந்தைகள் இலக்கியம்*பெரியார் தாத்தா*மோ.அருண்

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது- மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்*செவ்வியல் இலக்கண ஆய்வு : இடைச்சொற்கள் பதினென் கீழ்கணக்கு*முனைவர் ஜா.கிரிஜா

10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது-குறும்படம்*அரிதாரம்*இயக்கம் : 'பி.சுரேஷ்குமார்'

11. என்.பி.நல்லசிவம் - ரத்னம் நினைவு விருது-ஆவணப்படம்*நொச்சிமுனை தர்கா*இயக்கம் : 'ஆத்மா ஜாபிர்'

12. அமரர் மு.சி.கருப்பையா பாரதி -ஆனந்த சரஸ்வதி அம்மாள்*நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது-*'கலைமாமணி நாகு'

13. ப.திருவுடையான் நினைவு*இசைச்சுடர் விருது-*'மலையூர் சதாசிவம்'

14. த.பரசுராமன் நினைவு*நாடகச்சுடர் விருது-*'பேராசிரியர் ராஜு'

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு*பெண் படைப்பாளுமை விருது*'-புதிய மாதவி'

விருது விழா 2024 ஜனவரி, சென்னையில் நடைபெறும்.” என்று த.மு.எ.க.ச. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com