தமிழ் நாடு

வி.சி.க. அலுவலகத்துக்கு விஜய் வருவதாகச் சொன்னதாகவும் அதற்கு தான் வரவேண்டாம் எனக் கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக வி.சி.க.தரப்பில் இன்று மாலை கடிதம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன் இதைக் கூறினார்.
“ஆளுநரைச் சந்தித்துவிட்டு எங்கள் கட்சியின் தலைமையகத்துக்கு வருவதாக விஜய் கூறினார். பதவியேற்புக்கு முன்னர் வரவேண்டிய கட்டாயம் இல்லை. அதன்பிறகு சந்தித்துக்கொள்ளலாம் என அவரிடம் கூறிவிட்டேன்.” என்று திருமா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களின் ஆதரவு இருந்ததைக் குறிப்பிட்டார்.