தொப்பூர் சாலை விபத்து
தொப்பூர் சாலை விபத்து

தொப்பூர் சாலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

தொப்பூர் இரட்டைப்பால விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகம் விபத்து நடைபெறும் இடங்களில் ஒன்றாக தொப்பூர் கணவாய் திகழ்கிறது. சாலையின் அமைப்பு முறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

''தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா, ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

'இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். '' என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com