அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அவரை ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர். பாலு ஆஜரானார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் நடந்த வாக்குவாதம் பின்வருமாறு…
பத்திரிக்கையாளர்: 2004ஆம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009இல் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். அப்போது போகாத மானம், இப்போது வெளியிட்ட திமுக பைல்ஸ் மூலம் டிஆர் பாலுவுக்கு மானம் போய்விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளாரே?
டி.ஆர். பாலு: உங்களை அந்த மாதிரி கேட்க சொன்னாரா?
பத்திரிக்கையாளர்: பேட்டியே கொடுத்துள்ளார்.
டி.ஆர்.பாலு: பேட்டி கொடுத்திருக்காரா? சரி அதற்கு பதில் சொல்கிறேன். சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்கலைல இதை?
பத்திரிக்கையாளர: அண்ணாமலை சொன்னதை தான் கேட்கிறேன்.
டி.ஆர்.பாலு: எந்த இடியட் சொன்னாலும், நீங்கள் கேட்கலைல?
பத்திரிக்கையாளர்: நான் கேட்கல அண்ணாமலை கூறியதை தான் கேட்கிறேன்.
டி.ஆர். பாலு: அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். நான் பதில் சொல்கிறேன்.
தொடர்ந்து, அதே பத்திரிக்கையாளர்”ரூ.10 ஆயிரம் கோடி உங்களுக்கு என” கேள்வி கேட்க தொடங்கியதும் குறுக்கிட்ட டி.ஆர்.பாலு “யோவ்… உடுயா… போய்யா…' எனக்கூறிவிட்டு சென்றார்.
மூத்த நாடாளுமன்ற ஊறுப்பினர் என பல்வேறு பொறுப்புமிக்க பதவிகளில் இருந்த டி.ஆர். பாலு இப்படி ஒருமையில் பேசியிருப்பது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.